உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சரியான நேரத்திற்கு பணிக்கு வராத அலுவலர்கள் அஞ்செட்டி தாலுகா ஆபீசில் மக்கள் காத்திருப்பு

சரியான நேரத்திற்கு பணிக்கு வராத அலுவலர்கள் அஞ்செட்டி தாலுகா ஆபீசில் மக்கள் காத்திருப்பு

ஓசூர்: தமிழக எல்லையில் அமைந்துள்ள மலை கிராமங்களான அஞ்செட்டி, தொட்டமஞ்சு, கோட்டையூர், மஞ்சுகொண்டப்பள்ளி, மாடக்கல், நாட்ராம்பாளையம், தக்கட்டி, உரிமம் உள்ளிட்ட மலை கிராம மக்கள், நீண்ட துாரம் பயணம் செய்து, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டியிருந்ததால், அஞ்செட்டியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அறிவிக்கப்பட்டது. இதனால், மலை கிராம மக்கள், தங்களுக்கு தேவையான அரசின் சலுவைகள் மற்றும் சான்றிதழ்கள் பெற, நீண்ட துாரம் செல்வது தவிர்க்கப்பட்டது.அரசு எந்த தேவைக்காக, அஞ்செட்டியை தனி தாலுகாவாக அறிவித்ததோ, அந்த தேவை இன்னும் பூர்த்தியாகவில்லை என, மலை கிராம மக்கள் கூறுகின்றனர். அதாவது, அஞ்செட்டி தாலுகா அலுவலகத்திற்கு, தினமும் சரியான நேரத்திற்கு அலுவலர்கள் வருவதில்லை.கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இத்தாலுகா அலுவலகம் அமைந்துள்ளதால், மாவட்ட கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய வாய்ப்பு குறைவு. அதனால், அஞ்செட்டி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் அலட்சியமாக உள்ளனர்.இதனால், பல்வேறு தேவைகளுக்காக அஞ்செட்டி தாலுகா அலுவலகத்திற்கு வரும் மலை கிராம மக்கள், அதிகாரிகள் இல்லாமல், நீண்ட நேரம் வெளியே காத்துக் கிடக்கின்றனர். இதனால், தாங்கள் வந்த வேலை முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுவதாக மலை கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மலை கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை