மேலும் செய்திகள்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
13-Sep-2024
கிருஷ்ணகிரி: சாக்கடை கால்வாய் வழியாக செல்லும் ஒகேனக்கல் குடிநீர் குழாயில், கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி ராஜிவ் நகர் வழியாக, 1,000க்கும் மேற்பட்ட வீடுக-ளுக்கு, 3 இன்ச் விட்டத்திலான பிளாஸ்டிக் பைப் லைன் மூலம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்த குடிநீர் குழாய், ராஜிவ் நகரிலுள்ள சாக்கடை கால்வாய் அடியில் செல்-வதால், பைப் அடிபட்டு கடந்த, 5 மாதங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டதால், குடிநீர் வீணானதோடு, உடைந்த குழாய் வழியாக சாக்கடை கழிவுநீரும் கலந்து வந்தது. இந்த விரிசலை சம்பந்தப்பட்ட துறையினர் உடனே சரி செய்-தனர். ஆனாலும் இக்குழாய் தற்போது வரை சாக்கடை கால்வாய் வழியாக செல்வதால், கால்வாயை துார்வாரும் போது குழாய், மீண்டும் உடைந்து சேதமடைய வாய்ப்புள்ளது. அவ்வாறு சேதம் அடைந்தால், உடனே கழிவுநீர் குடிநீரில் கலந்துவிடும் அபா-யமும் உள்ளது.எனவே, ஒகேனக்கல் குடிநீர் குழாயை கால்வாயில் இருந்து அகற்றி, முறையாக மண்ணில் புதைக்க வேண்டும் என, அப்ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13-Sep-2024