மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியில், மின்வாரியத்தின் உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், அந்த அலுவலக வளாகத்திலேயே, உதவி செயற் பொறியாளர் அலுவலகம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க., துணை பொதுச்செயலரும், வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி அலுவலக பலகையை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.உதவி பொறியாளர்கள் மகேந்திரன், மோனிகா, அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.