உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வனத்துறை நிலத்தில் வேலி அமைக்க எதிர்ப்பு

வனத்துறை நிலத்தில் வேலி அமைக்க எதிர்ப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் ஊட்டமலை கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதையொட்டி அஞ்செட்டி - ஒகேனக்கல் பிரதான சாலை உள்ளது. இச்சாலை குறுகியதாய் உள்ள நிலையில், ஒகேனக்கல் வனத்துறையினர் வனத்துறைக்கு சொந்தமான சாலையை ஒட்டிய இடத்தில், காவேரி பாதுகாப்பு திட்டம் மூலமாக, கம்பி வேலி அமைக்கும் பணி தொடங்கினர்.இதையறிந்த ஊட்டமலை கிராம மக்கள் அப்பணியை தடுத்து, ஒகேனக்கல் - அஞ்செட்டி செல்லும் சாலை மிகவும் குறுகலான சாலை, இதில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க கூட இடமில்லாத நிலையில், கம்பி வேலி அமைக்கக்கூடாது என, வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், ஒகேனக்கல் ரேஞ்சர் சிவகுமார், பென்னாகரம் ரேஞ்சர் ராஜ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சாலையிலிருந்து சிறிது துாரம் தள்ளி, கம்பி வேலி அமைக்கப்படும். வனத்துறை இடத்திலுள்ள மூன்று வீடுகளை அப்புறப்படுத்த, ஒரு மாதம் கால அவகாசம் தருவதாகவும் கூறியதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை