மேலும் செய்திகள்
ஓசூர் புதிய நகர வளர்ச்சி திட்டம் அரசு ஒப்புதல்
24-Jan-2025
ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், தங்கள் பகுதியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொரப்பள்ளி பஞ்.,த்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப்பள்ளி அக்ரஹாரம் பஞ்.,ல் குமுதேபள்ளி, எல்லம்மா கொத்துார், காந்தி நகர் மற்றும் வள்ளலார் நகர், அக்சயா கார்டன், சாய் கார்டன், காமராஜ் காலனி, வெங்கடேஸ்வரா லேஅவுட், உள்-ளிட்ட பகுதிகள் உள்ளன. விவசாய நிலங்கள் அதிகமுள்ள இப்பகுதியை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது. ஊரக வேலையை நம்பியுள்ள ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகுவர். மாநகராட்சியுடன் இப்பகுதியை இணைப்பதால், ஒரு சதுர அடி நிலம், 160 ரூபாயிலிருந்து, 850 ரூபாயாக உயரும் அபாயம் உள்ளது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி பல மடங்கு உயரும். இவ்வாறு, அவர்கள் கூறினர். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்களை எழுப்பிய அவர்கள், இது குறித்த மனுவை, ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கினர்.
24-Jan-2025