உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவிலில் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபாடு

பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவிலில் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபாடு

பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவிலில்ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபாடுபென்னாகரம், டிச. 25-பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் முனியப்பன் சுவாமி கோவில் திருவிழாவில் நேற்று, ஏராளமான ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிளியனுார் அக்ரஹாரத்திலுள்ள முனியப்பன் சுவாமி கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதி பக்தர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆண்டுதோறும் மார்கழி, 2வது செவ்வாய்க்கிழமை இக்கோவில் திருவிழா நடக்கிறது. இதையொட்டி, கோவிலை சுற்றியுள்ள சிக்கனம்பட்டி, புதுார், அரிச்சந்திரனுார், அக்ரஹாரம், கெட்டூர், நல்லாம்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முனியப்ப சுவாமிக்கு விரதமிருந்து, மாலை அணிந்து வந்து வழிபட்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஏராளமான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டும், பொங்கலிட்டும் வழிபட்டனர். கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்களை தவிர்க்க, பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி