மேலும் செய்திகள்
சப்ளம்மா தேவி கோவிலில் மாடுகள் திருவிழா துவக்கம்
28-Jan-2025
ஓசூர்:ஓசூர், சப்ளம்மா தேவி கோவில் மாடுகள் திருவிழாவில் நேற்று, 100 க்கும் மேற்பட்ட பல்லக்கு ஊர்வலம் நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே, 800 ஆண்டு பழமையான சப்ளம்மா தேவி கோவிலில், மாடுகள் திருவிழா கடந்த, 27 ல் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜை செய்யப்பட்டது. விழாவில், நுாற்றுக்கணக்கான நாட்டின மாடுகள், பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகின. சிறந்த மாடுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பல்லக்கு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக மதியம், 2:00 மணிக்கு, கவுரி பசவேஸ்வர சுவாமி குழுவினரால் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, 'குருச்ஷேத்திரம்' என்ற தெலுங்கு நாடகம் நடந்தது. தொடர்ந்து, 100 க்கும் மேற்பட்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில், உள்ளூர் கிராம தேவதைகள் அமர வைக்கப்பட்டு, பல்லக்கு ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சப்ளம்மா தேவி கோவில் கமிட்டி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
28-Jan-2025