உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 17 வயது மகளுக்கு திருமணம் போலீஸ் வழக்கால் பெற்றோர் தற்கொலை

17 வயது மகளுக்கு திருமணம் போலீஸ் வழக்கால் பெற்றோர் தற்கொலை

திருப்பத்துார்: சிறுமிக்கு காதல் திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், மனமுடைந்த பெற்றோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவியை சேர்ந்தவர் குமார், 50. இவர் மனைவி கவிதா, 47. இவர்களது 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, 23, என்ற வாலிபரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு தரப்பினர் என்றாலும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இதற்கு, ஊரில் எதிர்ப்பு கிளம்பி, சிறுமிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாக, அப்பகுதி மக்கள் பர்கூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய நிலையில், சிறுமி பூச்சி மருந்து குடித்து கவலைக்கிடமாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக, போலீசார் பதிந்த வழக்கில் ஜாமின் பெற, உயர் நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறி, குமார் - -கவிதா தம்பதி சென்னை சென்றனர்.இந்நிலையில், திருப்பத்துார் மாவட்டம், மொளரகன்பட்டி கீழ்குறும்பர் பகுதியில், ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை