உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, பட்டக்கானுார் சரட்டூரிலுள்ள பட்டாளம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த, 2-ம் தேதி முதல் ஹோம பூஜை நடந்தது. நேற்று காலை கணபதி ஹோமம், சண்டி ஹோமம் நடந்தது.தொடர்ந்து கோபுர கலச புனிதநீர் புறப்பாட்டு நடத்தப்பட்டு, பட்டாளம்மன் ராஜகோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சரட்டூர் ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி