உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கருணாநிதி நினைவு நாள் இன்று அமைதி பேரணி

கருணாநிதி நினைவு நாள் இன்று அமைதி பேரணி

ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள் இன்று (ஆக.7) அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலையிலிருந்து, தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலை வரை, அமைதி பேரணி நடக்கிறது. அங்கு அண்ணாதுரை சிலைக்கு முன்பாக வைக்கப்படும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.எனவே, கட்சியின் மூத்த முன்னோடிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக, அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அனைவரும் அமைதி பேரணியில் பங்கேற்க வேண்டும். அதேபோல், மாநகர, ஒன்றிய, பகுதிகளில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை