உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓய்வூதியர் தின விழா

ஓய்வூதியர் தின விழா

கிருஷ்ணகிரி, டிச. 20-கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், நேற்று ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சரவணபவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முருகன் துவக்கவுரை ஆற்றினார். மாவட்ட இணை செயலாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.இதில், மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் பேசுகையில், ''புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 10 சதம் கூடுதல் ஓய்வூதியமும், பஸ் மற்றும் ரயில் இலவச பயணத்திற்கு அனுமதியும் வழங்க வேண்டும்,'' என்றார்.விழாவில், 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை