மேலும் செய்திகள்
தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு
12-Dec-2024
ஓசூர்: கெலமங்கலம் அருகே, சாலையில் உலா வந்த ஒற்றை யானையால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, 'கிரி' என்ற ஆண் யானை, ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது. இதற்கு காது கேட்காது என்பதால், பட்டாசு வெடித்தால் கூட வனப்பகுதிக்குள் செல்வ-தில்லை. இந்நிலையில் கெலமங்கலம் அருகே பென்னிக்கல், கெலமங்-கலம், போடிச்சிப்பள்ளியில் நேற்று காலை, 8:45 மணிக்கு நீண்ட நேரமாக உலா வந்தது. இதனால் அவ்வழியாக சென்ற மக்கள், வாகன ஓட்டிகள், வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு யானை செல்வதற்கு காத்திருந்தனர். இதனால் அதிக வெடியுடன் கூடிய பட்டாசு, தீப்பந்தம் கொளுத்தி விரட்டும் பணியில், வனத்-துறையினர் ஈடுபட்டனர். இதனால் வனப்பகுதிக்கு சென்றது. அதன் பின் வாகன ஓட்டிகள் பயணத்தை தொடங்கினர். இதனிடையே ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்காட்டில், 13 யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், 20க்கும் மேற்-பட்ட யானைகளும், ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்க்-கத்தில், 30 யானைகளும் திரிகின்றன. இவற்றால் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் தினமும் ராகி, தக்காளி, சோளம் உள்-ளிட்ட விவசாய பயிர்கள் சேதமாகி வருகிறது. கர்நாடகா மாநிலத்-துக்கு யானைகளை விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
12-Dec-2024