மேலும் செய்திகள்
அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்
16-Sep-2025
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், மல்லசந்திரம் பஞ்., உட்பட்ட பென்னங்கூர் கிராமத்தில், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்-றனர். கூட்டத்தில் மொத்தம், 14 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்-டன. வரவு, செலவு கணக்கு மற்றும் அடிப்படை வசதிகளை செய்ததற்கான போதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி, மக்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மேலும், பென்னங்கூர் கிராமத்தில் குப்பை அள்ளுவதில்லை. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதில்லை. தேசிய ஊரக வேலை-வாய்ப்பு திட்டத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், மக்கள் பயன்-படுத்தாத இடத்தில், மண் சாலை அமைக்கப்பட்டது. அச்சாலை கனமழைக்கு அரித்து செல்லப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல், மாதம் இருமுறை சுத்தம் செய்ய ஊழியர்கள் கணக்கு காட்டுகின்றனர். எங்கள் ஊரின் அருகே உள்ள ஜல்லி குவாரியை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடாது எனக்கூறி மக்கள் ஆத்திரமடைந்தனர். தகவலறிந்த பி.டி.ஓ.,க்கள் விஜயா, ராஜேஷ் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், மக்கள் தீர்மானத்தில் கையெழுத்-திட்டனர்.
16-Sep-2025