மேலும் செய்திகள்
மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் மூழ்கினார்
16-Dec-2024
பாலம் சேதமானதால் ஆற்றில் இறங்கிஇறந்தவர் உடலை எடுத்து சென்ற மக்கள்போச்சம்பள்ளி, : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, குன்னத்துாரில், ஆந்திர மாநிலத்தில் இருந்து பர்கூர், சுந்தரம்பள்ளி, குன்னத்துார் வழியாக பாம்பாறு அணைக்கு, ஆறு செல்கிறது. இதில் குன்னத்துார் பகுதியில் கடந்த டிச., 2ல் பெஞ்சல் புயலால் பெய்த மழையால், சுடுகாட்டிற்கு செல்லும் ஆற்றுப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், 70, என்பவர் வயது முதிர்வால் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் ஆற்றுப்பாலம் இடிந்திருந்த நிலையில், முழங்கால் அளவு செல்லும் ஆற்றுநீரில் இறங்கி, அவரின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
16-Dec-2024