உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சூறாவளியில் சாய்ந்த உயர்கோபுர மின்விளக்கு சரிசெய்து மீண்டும் அமைக்க மக்கள் கோரிக்கை

சூறாவளியில் சாய்ந்த உயர்கோபுர மின்விளக்கு சரிசெய்து மீண்டும் அமைக்க மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, கடந்த மே, 1ல் சூறாவளி காற்றில் சாய்ந்த உயர் கோபுர மின்விளக்கை, மீண்டும் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலையை சுற்றிலும், 4 சாலை செல்கிறது. இதனால் இச்சாலைகளை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில், காந்திசிலை அருகே உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த மே, 1 மாலை, பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் கிருஷ்ணகிரி நகரின் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள், பேனர்கள் சரிந்து கீழே விழுந்தன. அப்போது, காந்தி சிலை அருகில் இருந்த உயர் கோபுர மின்விளக்கு மற்றும், 2 மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. மின்கம்பங்களை மட்டும் சரிசெய்த மின்வாரியத் துறையினர், உயர்மின் கோபுரத்தை அருகில் தர்மராஜா கோவில் சாலையோரம் கிடத்தி விட்டுச் சென்றனர். ஒன்ற‍ரை மாதமாகியும் இதுவரை இந்த உயர்மின் கோபுர விளக்கை அமைக்கவில்லை. சாலையோரம் பயன்பாடின்றி கிடத்தப்பட்டுள்ளதால், உயர் கோபுர மின்விளக்கு சேதமடைந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில், மீண்டும் இந்த உயர்மின் கோபுர விளக்கை, காந்திசிலை அருகில் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை