உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீருக்கு அலையும் பூதனுார் காலனி மக்கள் அரசு கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு

குடிநீருக்கு அலையும் பூதனுார் காலனி மக்கள் அரசு கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், பாரண்டபள்ளிபுதுார் பஞ்.,க்கு உட்பட்ட, பூதனுார் அருந்ததியர் காலனியில், 90 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கடந்த ஓராண்டிற்கு முன் இடித்து அப்புறப்படுத்தி விட்டனர். கிராமத்திற்கு, போச்சம்பள்ளியிலிருந்து சிப்காட் செல்லும் சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு மாந்தோப்பிற்கு இடையிலுள்ள வழியில் செல்ல வேண்டி உள்ளது. சுடுகாட்டிற்கு வழிபாதையின்றி, கடும் அவதிக்குள்ளாகி, சடலத்தை அடக்கம் செய்ய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு, 6 மாதத்திற்கு மேலாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை பர்கூர் பி.டி.ஓ., அலுவலகம், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்தபின், தற்போது வரை எங்களுக்கு குடிநீர் வழங்க, அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியின் மூலம் கிடைக்கும் உப்பு நீரை, துணி துவைப்பது, போன்ற அன்றாட பணிகளுக்கு பயன்படுத்துகிறோம். குடிநீருக்கு, 2 கி.மீ., தொலைவில், சிப்காட் செல்லும் பகுதியிலுள்ள, வேப்பமரம் பஸ் ஸ்டாப் சென்று, தண்ணீர் எடுத்து வருகிறோம். இதனால், தினமும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. தெருவிளக்கு எரிவதில்லை, அவசர தேவைக்கு சாலை வசதி இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அருந்ததியர் காலனி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை