உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேன்கனிக்கோட்டை வனத்திலிருந்து வெளியேறிய யானைகளால் மக்கள் பீதி

தேன்கனிக்கோட்டை வனத்திலிருந்து வெளியேறிய யானைகளால் மக்கள் பீதி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை வனத்திலிருந்து தனித்தனியாக வெளியேறிய, 3 யானைகளால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனுார் வனப்பகுதியில், 5க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதிலிருந்து, 3 யானைகள் தனித்தனியாக பிரிந்து அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசமாக்கி வருகின்றன. அதில், ஒரு யானை மரக்கட்டா, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி தடிகல், ஏணிமுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகிறது.கடந்த ஒரு வாரமாக சுற்றித்திரியும் இந்த யானை தாக்கி, இதுவரை இருவர் காயம் அடைந்துள்ளனர். அதை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், ஆலஹள்ளி வனத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் வெளியேறிய, 2 யானைகள் தனித்தனியாக பிரிந்து, அப்பகுதி பயிர்களை நாசமாக்கி வருகின்றன. கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த ஒரு யானை நேற்று காலை அப்பகுதியில் இருந்த மின்வேலியை கீழே சாய்த்து விட்டு ஊருக்குள் புகுந்தது.வனத்துறையினர் பட்டாசு கள் வெடித்து, தனித்தனியாக சுற்றித்திரியும் யானைகளை ஒன்று சேர்த்து, வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.யானைகளின் தொடர் பிரச்னையால், பீதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், அவற்றை அடர்ந்த கர்நாடக வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்ட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ