உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கீழ்குப்பத்திலுள்ள பெருமாள் கோவில் தெப்பத்தேர் திருவிழா மற்றும் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. கோவில் கோபுர விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். இதில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கீழ்குப்பம் ஊர்மக்கள் சார்பாக தெப்பத்தேர் திருவிழா கொண்டாடப்பட்டது. தெப்பத்தேர் திருவிழாவையொட்டி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் தெப்பத்தேரில் பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ