மேலும் செய்திகள்
ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
05-Feb-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள துார்வா-சனுார் மற்றும் கருவாட்டனுார் கிராம மக்கள் சாலை ஆக்கிர-மிப்பை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: ராயக்கோட்டை பஞ்., துார்வாசனுார் மற்றும் கொப்பகரை பஞ்., கருவாட்டனுார் கிராமங்களில் வசிக்கும் மக்கள், கடந்த, 100 ஆண்டுகளுக்கு மேலாக ராயக்கோட்டை பிரிவு மஜீத் வழியாக, 21 அடி பொதுச்சாலையை பயன்படுத்தி வந்தனர். இச்சாலை வழி-யாக சிவதுாருவாச மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதேபோல், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் மற்றும் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இச்சாலை, குடியிருப்புவாசிகள், கடைக்காரர்களால் ஆக்-கிர மிக்கப்பட்டு தற்போது, 10 அடி சாலையாக சுருங்கியுள்ளது.இச்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கடந்த, 15 நாட்க-ளுக்கு முன்பு, சிமென்ட் கற்கள் பதிக்கும் பணியை துவக்கினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கெலமங்கலம் பி.டி.ஓ.,விடம் நேரில் மனு அளித்தோம். அவர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் கடந்த, 8ல் மீண்டும் சிமென்ட் கற்கள் பதிக்கும் பணியை துவங்கினர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ராயக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எனவே, 21 அடி சாலையிலுள்ள ஆக்கிரமிப்-புகள் அகற்றி, தார்ச்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.
05-Feb-2025