உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக போலீசில் புகார்

கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக போலீசில் புகார்

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, கோட்டப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 40. இவர், தன் விவசாய நிலத்தில், 50க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளை வளர்க்கிறார். நேற்று காலை வழக்கம் போல கோழிகளை உணவு உண்ண திறந்து விட்டபோது, அதில் ஆங்காங்கே, 10 கோழிகள் இறந்து கிடந்தன.அதிர்ச்சியடைந்த அவர், இறந்த கோழிகளுடன் சென்று, பாரூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அதில், தன் வீட்டின் அருகிலுள்ள நபர்கள் தான், பொறாமையில் விஷம் வைத்திருக்கலாம் எனக்கூறியிருந்தார். அதன்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ