உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கழுத்தை அறுத்து பெண் கொலை வழக்கு கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை

கழுத்தை அறுத்து பெண் கொலை வழக்கு கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மேட்டு கொல்லகொட்டாயை சேர்ந்தவர் பழனி, 40; இவர் மனைவி சத்யா, 36; இவர்களுக்கு, 18, 16 வயதில் இரு மகன்கள். நேற்று முன்தினம் மதியம் பழனி வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, சத்யா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அருகே உறவினரான மாரியப்பன், 26, கழுத்தில் வெட்டு காயத்துடன் கிடந்தார்.இது குறித்து சுண்டேகுப்பம் வி.ஏ.ஓ., பூபதி, 48, புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், சத்யாவின் சடலத்தை மீட்டனர். பின், படுகாயத்துடன் கிடந்த மாரியப்பனை கிருஷ்ணகிரியிலும், பின் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.இக்கொலை தொடர்பாக போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:கொலையான சத்யாவின் கணவர் பழனியின் சகோதரி மகன் மாரியப்பன், 26; இவர், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஆலமரத்து கொட்டாயை சேர்ந்தவர். இவர் தன் தாய்மாமா பழனி வீட்டில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் தங்கி, பேக்கரியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது சத்யா - மாரியப்பன் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.நேற்று முன்தினம் பழனி காவேரிப்பட்டணம் சென்று விட்டார். சத்யாவின் மகன்களும் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டுக்கு வந்த மாரியப்பனிடம், சத்யா தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை