மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி கொள்ளையில் தொடர்பு
28-Sep-2024
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி - குப்பம் செல்லும் சாலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை கடந்த மாதம், 21 அதிகாலை மர்ம கும்பல் உடைத்து, 23 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இதே போல், குருபரப்பள்ளி, ஓசூர் ஏ.டி.எம்.,களில் 24.50 லட்சம் ரூபாய் கடந்த சில மாதங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கொள்ளை அனைத்தும், ஏ.டி.எம்., இயந்திரங்களை வெல் டிங் மூலம் வெட்டி எடுத்து கொள்ளை நடந்துள்ளது. கடந்த வாரம் கேரளாவில், 3 ஏ.டி.எம்.,களில், 66 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து வந்த கும்பலை, நாமக்கல் அருகே போலீசார் பிடித்தனர். இதில் ஒருவரை, போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மற்றொருவருக்கு காலில் குண்டு பாய்ந்து ஒரு காலை டாக்டர்கள் அகற்றினர். அக்கொள்ளையர்களிடம், கிருஷ்ணகிரி போலீசார் விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம்., கொள்ளையில், வடமாநில கும்பல் ஈடுபட்டது தெரிந்தது. ராஜஸ்தான், அரியானா மாநிலங்களை சேர்ந்த அக்கும்பலை பிடிக்க, கிருஷ்ணகிரி தனிப்படை போலீசார், அங்கு விரைந்துள்ளனர்.
28-Sep-2024