மேலும் செய்திகள்
வெயிலை சமாளிக்க ஒகேனக்கல்லில் திரண்ட மக்கள்
28-Apr-2025
ஒகேனக்கல்,:ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீரில் மூழ்கி பலியாவதை தடுக்கும் விதமாக, ஒகேனக்கல் போலீசார், ட்ரோன் மூலம் கண்காணித்து, சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் விடுமுறை மற்றும் கோடைக்காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக தடை செய்யப்பட்ட ஆலம்பாடி, நாடார் கொட்டாய், ஊட்டமலை பரிசல் துறை, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். அவ்வாறு குளிக்கும் சுற்றுலா பயணிகள் நீச்சல் தெரியாமலும், குடிபோதையிலும் தண்ணீரில் மூழ்கி பலியாகின்றனர்.கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் சுற்றுலா பயணிகளின் உயிரிழப்புக்களை தடுக்கும் விதமாக எஸ்.பி., மகேஷ்வரன் உத்தரவின்படி, பென்னாகரம் டி.எஸ்.பி., சபாபதி, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் நேற்று, முதலைப்பன்ணை எதிரே உள்ள காவிரிக்கரையோரத்தில் இருந்து, ட்ரோன் மூலம் ராணிப்பேட்டை, ஊட்டமலை பரிசல் துறை, உள்ளிட்ட இடங்களில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து, போலீசார் மூலம் அவர்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடத்தில் குளிக்கும்படி அறிவுறுத்தினர்.
28-Apr-2025