உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பொன்முத்து மாரியம்மன் கோவில் விழா

பொன்முத்து மாரியம்மன் கோவில் விழா

பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பொ.மல்லாபுரம் பொன்முத்து மாரியம்மன் கோவில், 46ம் ஆண்டு திருவிழா கடந்த, 15ல் முனியப்பனுக்கு எல்லை பூஜை செய்து கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டுதல், சக்தி அழைத்தல், தாய் வீட்டு சீர் அழைத்தல், திருமஞ்சனம் கூழ் ஊற்றுதல், முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பக்தர்கள் அம்மனுக்கு பூங்கரகம் எடுத்து, அலகு குத்துதல், அக்னிகரகம் எடுத்து தேர் பவனி நடந்தது. தேர்பவனி தர்மபுரி மெயின், ஆர்.எம்.,ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவிலை அடைந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை