உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.5.55 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட பூஜை

ரூ.5.55 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட பூஜை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், 5.55 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரி நகர், சேலம் சாலையில் உள்ள நெசவுக்கார தெருவில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கியது. போதிய இடவசதி, அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கிய பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, பத்திரப்பதிவு அலுவலகம், கிருஷ்ணகிரி, ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள, 'மா' குளிர்பதன கிடங்கு அமைந்துள்ள அலுவலகத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.அதில், தற்போது பொதுப் பணித்துறை சார்பில், 5.55 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பத்திரப் பதிவு அலுவலகம் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது.அடுத்த, 11 மாதங்களில், 4 தளங்களுடன், 10,997 சதுர அடி பரப்பில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைய உள்ளது. இந்த அலுவலகத்தில் சங்கங்களின் பதிவாளர், தொழில் நிறுவனங்களில் பதிவாளர், சீட்டு நிதிகள் ஆய்வு அலுவலர், ஹிந்து திருமண பதிவாளர், தனித்திருமண அலுவலர், தொழில் கூட்டுப்பதிவு ஆகிய அலுவலகங்களுடன், பத்திர பதிவுக்காக, 2 சார் பதிவாளர் அலுவலகம் அமையும். தரைதளத்தில் பார்க்கிங் மற்றும் ஈ-ஸ்டாம்ப், கழிவறை வசதிகளும் செய்யப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.சேலம் சரக பத்திரபதிவு துறை துணை தலைவர் சிபிதா லட்சுமி, மாவட்ட பதிவாளர் பாலசுப்ரமணியன், மேலாளர் புவனேஸ்வரி, சார் பதிவாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை