மேலும் செய்திகள்
பள்ளபட்டி தொடக்கப்பள்ளிக்கு விருது
16-Nov-2024
சிறந்த பள்ளியாக தேர்வு ஹெச்.எம்.,க்கு பாராட்டுகிருஷ்ணகிரி, நவ. 17-சென்னையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சி நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த கங்காவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாணவர்களின் ஒழுக்கம், வருகை பதிவேடு, பள்ளி சுகாதாரம், மாணவர்களின் கல்வி தேர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் சிறந்து விளங்குவதால், இப்பள்ளியை சிறந்த பள்ளியாக தேர்வு செய்து, பள்ளி தலைமை ஆசிரியை ஜோனாமேரியிடம், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கேடயம் வழங்கி பாராட்டினார். இதையடுத்து பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், பள்ளி தலைமை ஆசிரியருக்கு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.பஞ்., தலைவர் ரங்கநாதன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உடனிருந்தனர்.
16-Nov-2024