மேலும் செய்திகள்
ஊத்தங்கரையில் பலத்த மழை
12-Apr-2025
கிருஷ்ணகிரி: பா.ம.க.,வின் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடந்-தது. இதை முன்னிட்டு மாநாட்டிற்கு சென்ற பலர் போச்சம்-பள்ளி - மத்துார், ஊத்தங்கரை,- சிங்காரப்பேட்டை, திருவண்ணா-மலை,- காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, - பர்கூர், வேலுார் சாலை வழியாக சென்றனர்.இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வழித்தடங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்பது டாஸ்மாக் கடைகளை, நேற்று ஒருநாள் மூடிட போலீஸ் எஸ்.பி., தங்க-துரை, கலெக்டர் தினேஷ்குமாரிடம் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி, போச்சம்பள்ளி தாலுகா கண்ணன்டஅள்ளி, ஊத்தங்கரை அம்பேத்கர் நகர், சென்னப்பநா-யக்கனுார், சிங்காரப்பேட்டை, சின்னதள்ளப்பாடி, கருங்கல்மேடு, காரகுப்பம், ஒரப்பம், செட்டியூர், சோக்காடி ஜங்ஷன் பகுதியில் இருந்த ஒன்பது டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.
12-Apr-2025