கே.ஆர்.பி., அணை பின்பகுதியில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடுகள்
கிருஷ்ணகிரி, விநாயகர் சதுர்த்தி விழா கடந்த, 27ல் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,500 சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 3ம் நாளான இன்று (ஆக.29) விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் பின்பகுதியில் கரைக்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை, போலீசார், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, ஆம்புலன்ஸ் நிர்வாகம், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினர் என மொத்தம், 100க்கும் மேற்பட்டோர் செய்து வருகின்றனர்.பொதுமக்கள், விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட தொலைவில் கொண்டு சென்றால், அங்குள்ள பணியாளர்கள் அவர்களிடம் இருந்து சிலைகளை வாங்கிக் கொண்டு தண்ணீரில் சென்று கரைக்க உள்ளனர். பெரிய சிலைகளை கிரேன் மூலம் எடுத்து, நீரில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.