மேலும் செய்திகள்
அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் கண்டக்டர் கைது
09-Jun-2025
ராயக்கோட்டை, ராயக்கோட்டையில், பட்டதாரி நபர் அடித்து கொலை சம்பவத்தில், தனியார் கட்டட மேலாளர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த கொப்பக்கரை அருகே உள்ள லிங்கனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார், 45. எம்.எஸ்சி., பட்டதாரி. திருமணமாகாத இவர், வேலைக்கு செல்லாமல், தன் தாயுடன் வசித்து வந்தார். குடிப் பழக்கத்திற்கு அடிமையான அவர், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, ராயக்கோட்டை தக்காளி மண்டி பகுதியிலுள்ள தனியார் பேக்கரி முன் நின்று கொண்டு, தனக்குத்தானே பேசி கொண்டிருந்தார். அங்கிருந்த கட்டடத்தின் மேலாளரான, ராயக்கோட்டை அருகே சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த சிவசக்தி, 25, என்பவர், இங்கு சத்தம் போடக்கூடாது எனக்கூறி, அவரின் பின் தலையில் தைல மரக்கட்டையால் அடித்தார். இதில் படுகாயமடைந்த ராம்குமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றிரவு உயிரிழந்தார். ராம்குமார் அண்ணன் செந்தில்குமார், 50, புகார் படி, ராயக்கோட்டை போலீசார், சிவசக்தியை கைது செய்தனர்.
09-Jun-2025