பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
சூளகிரி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 36. இவர் சூளகிரி அருகே காமன்தொட்டியில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.கடந்த, 27 இரவு அவர், காமன்தொட்டி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் சந்தோஷ்குமார் மீது மோதியதில் இறந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.