உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.17 கோடி கையாடல் தனியார் ஊழியர் கைது

ரூ.1.17 கோடி கையாடல் தனியார் ஊழியர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கலுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் வசந்த், 32; தனியார் நிறுவன மூத்த கணக்காளர். நிறுவனத்தில் கேசவமூர்த்தி, 30, நிர்வாக கணக்காளராக பணியாற்றி வருகிறார்.மூலப்பொருட்கள் வழங்கியவர்களுக்கு, கேசவமூர்த்தி முறையாக பணம் கொடுக்காமலும், பணிக்கு சரியாக வராமலும் இருந்தார். இதுகுறித்து, வசந்த் கேட்டபோது, உடல்நலம் சரியில்லை என, கூறியுள்ளார்.சந்தேகமடைந்த வசந்த், ஆடிட்டர் வாயிலாக நிறுவனத்தின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்ததில் கேசவமூர்த்தி, நிறுவன பணத்தை முறைகேடாக எடுத்து, அவரது மனைவி கணக்கிலும், சக ஊழியர் ரஞ்சித் என்பவரின் கணக்கிலும், 1.17 கோடி ரூபாய் முதலீடு செய்தது தெரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வசந்த் புகாரளித்தார். போலீசார் கேசவமூர்த்தியை கைது செய்தனர். இது தொடர்பாக கேசவமூர்த்தியின் மனைவி திவ்யா, ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை