உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நின்ற டிராக்டரில் பைக் மோதல் தனியார் ஊழியர் உயிரிழப்பு

நின்ற டிராக்டரில் பைக் மோதல் தனியார் ஊழியர் உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தளி கொத்தனுார் அருகே, சிலிபிலிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 39. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, தளியில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றார். ஜான்பிரிட்டோ பெண்கள் விடுதி அருகே சென்றபோது, சாலையில் நின்றிருந்த டிராக்டர் பின்னால் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த மஞ்சுநாத் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ