மேலும் செய்திகள்
த.வா.க.,வினர் ஆர்ப்பாட்டம்
25-Sep-2025
ஓசூர்: திருவள்ளூர் மாவட்டம், எர்ணாவூர் காந்தி நகரை சேர்ந்தவர் வினோத்ராஜ், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிருஷ்ணா நகர் கோபி கார்டன் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி-யாற்றி வந்தார். இவரும், தொரப்பள்ளி அருகே பென்னாமடம் ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த முரளிதரன், 35, என்பவரும், நேற்று முன்தினம் மதியம், 12:45 மணிக்கு, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சா-லையில் யம்ஹா ஸ்கூட்டரில் சென்றனர். வினோத்ராஜ் ஓட்-டினார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே வரும் போது, வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வினோத்ராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த முரளிதரன், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Sep-2025