மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
21-Oct-2025
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.ஓசூர், கெலமங்களம் பகுதியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனியார் கம்பெனியில் பணிபுரிய, நேர்முக தேர்வு நடந்தது. வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிகிரி, ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் சாகுல்அமீது, வடக்கு ஒன்றிய செயலர் வேடி, நகர செயலர் சிக்னல் ஆறுமுகம் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் வழங்கினார்.
21-Oct-2025