மேலும் செய்திகள்
என்.பி.ஆர்., கல்லுாரியில் நேர்முகத் தேர்வு
21-Sep-2024
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை வழங்கல்கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிருக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம், நேற்று பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பிரமிளா முன்னிலை வகித்தார். முகாமில், ஓசூரில் இயங்கி வந்த டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினர் கலந்து கொண்டு, காலிபணியிடங்களுக்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்தனர். இதில், கலந்து கொண்ட, 146 பேரில், 31 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், இன்று (26ம் தேதி) ஓசூர் எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மகளிருக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை, 8:00 மணி முதல், 3:00 மணி வரை நடக்கிறது.
21-Sep-2024