உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுஊத்தங்கரை, அக். 16-ஊத்தங்கரை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நடந்தது. ஊத்தங்கரை அரசு பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளை, பழைய மாணவர்கள் சங்கம் இணைந்து, கணினி நுாலக கட்டடத்தை புதுப்பித்தனர். இதை வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் அமானுல்லா, தேவராசன், ஊத்தங்கரை ஒன்றிய சேர்மன் உஷாராணி குமரேசன், தலைமை ஆசிரியர் பெரியசாமி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி கல்வி வளர்ச்சி குழு தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர்கள் முருகன், பொன்னுசாமி, உதவி தலைமை ஆசிரியர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் லோகநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி