ரூ.15.60 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 15.60 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், நகர செயலாளர் விமல், பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர இளைஞரணி செயலாளர் மதன், ஒன்றிய துணை செயலாளர்கள் விக்ரம்குமார், சரவணன் கலந்து கொண்டனர்.