உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் வக்கீல் மீது தாக்குதலை கண்டித்து கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூர் வக்கீல் மீது தாக்குதலை கண்டித்து கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூர் வக்கீல் மீது தாக்குதலை கண்டித்துகிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி, நவ. 23-ஓசூரில், வக்கீல் மீது கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரியும், கிருஷ்ணகிரி நீதிமன்றம் முன், வக்கீல்கள் இரண்டாவது நாளாக நேற்று பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்க தலைவர் கோவிந்தராஜூலு தலைமை வகித்தார். துணை தலைவர்கள் குமாரசாமி, கலையரசி முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வக்கீல்கள் திரண்டனர். அவர்கள் பேசுகையில், 'ஓசூரில் வக்கீல் ஒருவர், நீதிமன்ற வளாகம் அருகிலேயே கொடூரமாக வெட்டப்பட்டிருக்கிறார். வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை. பக்கத்து மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும்' என்றனர்.கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்க துணை செயலாளர் சிவசக்திகுமரன், நுாலகர் பாரூக், மூத்த வக்கீல்கள் ராமசந்திரன், அசோகன், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல போச்சம்பள்ளி, ஊத்தங்கரை நீதிமன்ற வளாகங்களிலும் அந்தந்த பகுதி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி