உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

சூளகிரி, சூளகிரி அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தியாகரசனப்பள்ளி பஞ்., உட்பட்ட பெப்பாலப்பள்ளி கிராமத்தில், 5 மாதமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால், சூளகிரி ஒன்றிய அலுவலகத்தில் சமீபத்தில் மக்கள் மனு அளித்தனர்.ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சூளகிரி -- ராயக்கோட்டை சாலையில், பெண்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 11:30 முதல், நண்பகல், 12:30 மணி வரை, ஒரு மணி நேரம் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூளகிரி போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பஞ்., நிர்வாகத்திடம் பேசி, குடிநீர் பிரச்னையை தீர்க்க, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை