உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வனத்துறையை கண்டித்து மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வனத்துறையை கண்டித்து மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே, வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் சூழல் சுற்றுலா மையம் அருகே, வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது. இதை கடந்து பெட்டமுகிலாளம் மலை கிராமத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு, வனத்துறையினர் மூலம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.உள்ளூர் மக்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய கூடாது என, மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், வியாபார நோக்கில் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே, கட்டணம் வசூல் செய்வதாக வனத்துறையினர் கூறி வருகின்றனர்.இதை கண்டித்தும், சோதனைச்சாவடியிலிருந்து பெட்டமுகிலாளம் வரை, 15 கி.மீ., வனத்துறை சாலை மோசமாக இருப்பதாகவும், அதை சீரமைக்க வலியுறுத்தியும், புதிய போர்வெல் அமைக்கவும், கிணறுகளை வாகனங்கள் மூலம் துார்வாரவும் நிபந்தனைகள் இல்லாமல் அனுமதி வழங்கக்கோரி, அய்யூர் வனத்துறை சோதனைச்சாவடி அருகே, நேற்று மதியம், 12:15 மணிக்கு, பிரவீன்குமார் என்பவரது தலைமையில், 70 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டு, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்தனர்.தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை, இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும், சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளதாகவும் கூறினர். அதனால் மதியம், 1:15 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வந்தது. திடீர் மறியல் காரணமாக, அவ்வழியாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை