உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவ, மாணவியருக்கு இலவச காலணி வழங்கல்

மாணவ, மாணவியருக்கு இலவச காலணி வழங்கல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் 'அன்பு செய்வோம் அறக்கட்டளை' சார்பில், நாகமலை, சிகரலப்பள்ளி, பூவத்தி, வெலகலஹள்ளி, பனகமுட்லு, பதிமடுகு, இருளப்பட்டி உட்பட மொத்தம், 12 கிராமங்களில், ஆசிரியர்களை நியமித்து, மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள், 75 பேர் மற்றும் மாணவியர், 125 பேருக்கு, 34,000 ரூபாய் மதிப்பில், 'அன்பு செய்வோம் அறக்கட்டளை' சார்பில், அதன் நிறுவனர் கவுரி, இலவசமாக காலணிகளை வழங்கினார். தன்னார்வலர்கள் ராஜூ, அருண் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ