மேலும் செய்திகள்
அடிப்படை வசதி செய்து கொடுப்பதாக மேயர் உறுதி
12-Oct-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 9 வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் நகரில், மாநகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளிகளுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் மூலம், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 50 மேசை, நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன.அவற்றை, மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்காக, பள்ளிகளின் நிர்வாகத்திடம் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் ஒப்படைத்தனர். ஓசூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் கிருஷ்ணப்பா, சீனிவாசலு உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Oct-2025