உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 569 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 569 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், கல்வி மற்றும் விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 569 மனுக்களை வரப்பெற்றன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆறு பேருக்கு, ஒரு லட்சத்து, 41,667 ரூபாய் மதிப்பில், வங்கி கடன் மானிய ஆணையும், ஒருவருக்கு, 6,840 ரூபாய் மதிப்பில், தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி