உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்கள் குறைதீர் கூட்டம்

மக்கள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 340 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.தொடர்ந்து தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நடந்த புத்தாக்க சிந்தனைகளுக்கான போட்டியில், மாநில அளவில் முதலிடம் பிடித்த, 3 மாணவியருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 2ம் இடம் பிடித்த, 5 மாணவியருக்கு, 50,000 ரூபாய்க்கான காசோலை, 2 வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 2 தலைமையாசிரியர்களுக்கு கேடயங்கள் என மொத்தம், 27 பேருக்கு, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி