உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., மாணவரணி சார்பில், ஓசூர் ராம்நகரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். கட்-சியின் துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் பழனி ஆகியோர் பேசினர். மாநகர செயலாளர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் இரவு, மொழிப்போர் தியா-கிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர், மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ