உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் ராதா கல்யாண மஹோத்சவம்

ஓசூரில் ராதா கல்யாண மஹோத்சவம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசப்பா திருமண மண்டபத்தில், ராதாகிருஷ்ண பஜன் மண்டலி டிரஸ்ட் சார்பில், 33ம் ஆண்டு ராதா திருக்கல்யாண மஹோத்சவ நிகழ்ச்சி கடந்த, 20ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் பாகவதர்கள் முரளிதரர், ராமசுப்பிரமணியர், வெங்கட்ரமணி ஆகியோருக்கு, பாகவத ஸ்ரேஷ்ட விருதும், பெங்களூரு உமா மகேஸ்வரனுக்கு, சிறந்த சமூக சேவைக்காக சேவா சிரோமணி விருதும் வழங்கப்பட்டன.ஓசூர் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு, வாஞ்சியம் முரளிதர பாகவதர் தலைமையில், வாஞ்சியம் குருஜி கிருபா மண்டலி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதியம், 12:30 மணிக்கு, ராதா, கிருஷ்ண திருமண வைபவம் நடந்தது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கிருஷ்ணர், ராதைக்கு திருமாங்கல்யம் அணிவித்து, மாங்கல்யதாரணம் நடந்தது. முன்னதாக, கிருஷ்ணர், ராதா சிலைகளுடன், பக்தர்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி