மேலும் செய்திகள்
ஒற்றை யானையால் பயிர்கள் நாசம்
17-Dec-2024
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து, 150க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி, தமிழக எல்லையான ஓசூர் வனக்கோட்டத்திலுள்ள பல்வேறு வனச்சரக பகுதிகளில் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 5க்கும் மேற்பட்ட யானைகள், திப்பசந்திரம், சந்தனப்பள்ளி, லிங்கதீரனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று, அறுவடை செய்து நிலத்தில் அடுக்கி வைத்திருந்த ராகி பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன.திம்மசந்திரம் பகுதியில் பலா மரங்களில் காய்களை பறித்து தின்றன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் பயிர்கள் சேதமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். யானைகளால் தொடர்ந்து பயிர்கள் சேதமாகி வருவதால், அவற்றை கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரைந்து விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17-Dec-2024