மேலும் செய்திகள்
வானவில் மன்ற விழா
10-Oct-2024
கிருஷ்ணகிரி, நவ. 9-கிருஷ்ணகிரி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை, வானவில் மன்றம் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பும், கணிதம் மற்றும் அறிவியலின் அணுகுமுறையும் என்ற தலைப்பில், வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சியை நேற்று நடத்தியது.இதில், 59 அரசு பள்ளிகளில் இருந்து, 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள், சுற்றுச்சூழலும் உணவு பாதுகாப்பும், எளிய முறையில் குப்பை பிரித்தல், நீர் நிலைகள் சுத்திகரிப்பு தொழில்நுட்பம், நிலச்சரிவு, டெங்கு பரவாத வீடு, சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தங்களது படைப்புகளை காட்சிக்காக வைத்திருந்தனர்.கண்காட்சியை, மாவட்ட திட்ட அலுவலர் வடிவேல் துவக்கி வைத்தார். மேற்பார்வையாளர் அசோக், வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன், பாபு, வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமணி, தலைமை ஆசிரியர் மதலின் மேரி உள்பட பலர் பங்கேற்றனர். அறிவியல் ஆசிரியர்கள் சங்கர், தேவேந்திரன், அனிதா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு, மூன்று படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.
10-Oct-2024