உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கனமழை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவி

கனமழை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவி

தர்மபுரி, டிச. 4-கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை நேற்று வழங்கினார்.'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட கனமழையில், தர்மபுரி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் தர்மபுரி கலெக்டர் சாந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, நல்லம்பள்ளி அடுத்த, தொப்பையாறு அணை நிரம்பி, அணையிலிருந்து உபரிநீர் வெளியேறுவதை பார்வையிட்டனர். பின், கம்மம்பட்டி பஞ்., உட்பட்ட காட்டுவளவு பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நல்லம்பள்ளி அருகே, அப்பனஹள்ளி கோம்பையில், கனமழையால் பாதிப்புக்குள்ளான வீடுகளை பார்வையிட்டு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், அதேபோல், கோடியூரில், 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார். தர்மபுரி நகராட்சி, பிடமனேரி சாலையில், தேங்கியுள்ள மழைநீரை மாவட்ட நிர்வாகம் சார்பில், வெளியேற்றப்படுவதை ஆய்வு செய்தார்.இதில், தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, நகராட்சி சேர்மன் லட்சுமி, நகராட்சி கமிஷ்னர் சேகர், தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை