உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உடைக்கப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைப்பு

உடைக்கப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைத்த, நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது. சிலர், குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தியதால் குடிநீர் துண்டிக்கப்பட்டது. புகார் படி, சேதமான ஆர்.ஓ., குடிநீர் குழாய்களை, அதை அமைத்து கொடுத்த நிறுவனம் மூலம் சரி செய்யப்பட்டு, நேற்று மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், புதிய பஸ் ஸ்டாண்டில், 4 இடங்களில் நகராட்சி மூலம் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி வைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் வைத்திருந்த பேனர்கள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளன. இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ